அதிர்ச்சி…பாராலிம்பிக் வட்டு எறிதலில் வெண்கலம் வென்ற வினோத் குமாருக்கு நேர்ந்த சோகம்.!

பாராலிம்பிக் வட்டு எறிதலில் வெண்கலம் வென்ற வினோத் குமாரின் பதக்கம் திரும்ப பெறப்பட்டுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.அதன்படி,நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான எஃப் -52 வட்டு எறிதல் போட்டியில் இந்தியா வீரர் வினோத் குமார் பங்கேற்று,முதல் முயற்சியில் 17.46 மீட்டர் தூரம் வீசினார்.அதன்பின்னர் இரண்டாவது முயற்சியில் 18.32 மீட்டர் தூரமும், மூன்றாவது முயற்சியில் 17.80 மீட்டர் தூரமும் வீசினார்.

இதனைத் தொடர்ந்து,நான்காவது முயற்சியில் 19.12 மீட்டர் தூரமும், ஐந்தாவது முயற்சியில் அதிகபட்சமாக 19.91 மீட்டர் தூரம் வீசி புதிய ஆசிய சாதனை படைத்தார். தன்னுடைய ஆறாவது வாய்ப்பில் அவர் 19.81 மீட்டர் தூரம் வீசினார்.எனினும்,தன்னுடைய அதிகபட்சமான 19.91 மீட்டர் தூரத்துடன் இந்திய வீரர் வினோத் குமார் 3 ஆவது இடத்தை பிடித்து,வெண்கலப்பதக்கத்தை பெற்றார்.

இந்நிலையில்,வினோத் குமாரின் வெண்கலப்பதக்கம் திரும்ப பெறப்பட்டுள்ளது.எஃப் -52 வட்டு எறிதலில் வினோத் பங்கேற்ற தகுதியற்றவர் என்று கூறி தொழில்நுட்பக்குழுவினர் எடுத்த முடிவின் அடிப்படையில் பதக்கம் திரும்ப பெறப்பட்டுள்ளது.இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த முதற்கட்ட தகவலின் அடிப்படையில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 1 குறைய வாய்ப்புள்ளது. எனினும்,பாராலிம்பிக்கின் இந்திய அதிகாரிகள் இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

Recent Posts

எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு ஒட்டு.? சென்னை வாக்குசாவடியில் சலசலப்பு.!

Election2024 : வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு ஓட்டு விழுவதாக சென்னை வியாசர்பாடியில் குற்றசாட்டு எழுந்துள்ளது. சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் உள்ள…

10 mins ago

நண்பகல் வரையில் வாக்குப்பதிவு நிலவரம்… தமிழகத்தை முந்திய புதுச்சேரி.!

Election2024 : தமிழகத்தில் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாடாளுமன்ற தேர்தல்…

47 mins ago

ஹர்திக் பாண்டியாவுக்கு 12 லட்சம் அபராதம்!

ஐபிஎல் 2024 : பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மெதுவதாக பந்துவீசியதால் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு 12 லட்சம் அபராதம். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில்…

48 mins ago

என்னப்பா அப்படியே இருக்கு! மெழுகு அருங்காட்சியகத்தில் விராட் கோலியின் சிலை !!

 Virat Kohli : ஜெய்ப்பூரில் உள்ள மெழுகு அருங்காட்சியத்தில் விராட் கோலியின் மெழுகு சிலையை திறந்துள்ளனர். இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆன விராட் கோலியின் மெழுகு…

1 hour ago

அய்யா! பும்ரா பந்தை அடிச்சிட்டேன்! அசுதோஷ் சர்மா உற்சாக பேச்சு!

ஐபிஎல் 2024  : பும்ரா பந்தை அடித்ததன் மூலம் என்னுடைய கனவு நிறைவேறிவிட்டது என அசுதோஷ் சர்மா தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்…

1 hour ago

அடடே.! பீட்ரூட்டை வைத்து ரசம் கூட செய்யலாமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

பீட்ரூட் ரசம் -பீட்ரூட் ரசம் செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம். பீட்ரூட்டை ஏதேனும் ஒரு வகையில் நம் உணவில்  தினமும்  சேர்த்து கொண்டோம் என்றால்  ரத்த…

1 hour ago