விநாயகரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு என்னென்ன தேவை?!

விநாயகர் சதுர்த்தி எனது ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாளில் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் வரும் திங்களன்று விநாயகர் பிறந்தநாளான, விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அன்று அரசு விடுமுறை என்பதால் கொண்டாட்டத்திற்கு பொதுமக்கள் தயாராகி வருகின்றனர்.

 

விநாயகர் சிலையானது நம் கட்டைவிரல் அளவை விட 12 மடங்கு அதிகமாக இருக்க வேண்டும். முழுக்க முழுக்க களிமண்ணால் செய்யப்பட்டு இருப்பது அவசியம். அது நம் சுற்றுசூழலுக்கும் நல்லது. அத்தைய சிலைகளை வீட்டில் வைத்து வழிபட வேண்டும். வழிபடும்போது விநாயகருக்கு பிடித்தமான உணவு வகைகளான, மோதகம், கொழுக்கட்டை, தேங்காய், வெல்லப்பாகு, பச்சரிசியால் செய்யப்பட்ட இனிப்பு வகைகள் போன்ற பலவகையான உணவு பலகாரங்கள் விநாயகருக்கு படைக்க வேண்டும்.

 

அவருக்கு வண்ண மலர்களால் தினமும் அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த பூஜையை பத்து நாட்களுக்கும் மேலாக செய்து இறுதியில் நாம் தற்காலிகமாக விநாயகர் சதுர்த்திகாக செய்யப்பட்ட விநாயகர் சிலையை நீர்நிலைகளில் கரைக்க வேண்டும்.

 

ஒவ்வொரு ஆண்டும் மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திர பிரதேஷ் போன்ற மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த வருடம் தமிழ்நாட்டிலும் மிகவும் கோலாகலமாக கொண்டாட பலரும் ஆயத்தமாகி வருகின்றனர். இந்த வருடமும் விநாயகர் பிறந்த நாள் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.