இன்று முதல் ஓய்வு பெறுகிறார் வேகப்பந்து வீச்சாளர் வினய் குமார்!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வினய் குமார், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வினய் குமார், இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட், 31 ஒருநாள் மற்றும் 9 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 37 வயதாகும் இவர், 2004 ஆம் ஆண்டு முதல் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தார். 2010 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் தொடரில் அறிமுகமானார். 2013 ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடிய அவருக்கு 2013 ஆம் ஆண்டிற்கு பின் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இவர் கடைசியாக கடந்தாண்டு ரஞ்சி கோப்பை போட்டியில் புதுச்சேரி அணி சார்பாக விளையாடினார். 139 போட்டிகள் விளையாடிய அவர், 504 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். அதுமட்டுமின்றி, ரஞ்சி போட்டியில் 442 விக்கெட்டுகள் எடுத்து அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் பட்டியலில் நான்காம் இடத்தை பெற்றார். இவர் ஐபிஎல் தொடரில் பெங்களூர்,கொல்கத்தா, மும்பை இந்தியன்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடினர்.

இந்நிலையில், இவர் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர், “என்னைப்பொறுத்தலவில் கிரிக்கெட் என்பது விளையாட்டு இல்லை. அது வாழ்க்கை. அந்த வாழ்க்கை, எனக்கு நிறைய பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளது.” என குறிப்பிட்டுள்ளது.