‘தமிழ் சினிமாவில் நடிக்கத் தயார்!’ – ‘ஜிமிக்கி கம்மல்’ புகழ் ஷெரில் கலகல பேட்டி #jimikkikammal

“அடிப்படையிலயே நான் ஒரு டான்சர், ஆனா இதுக்கு முன்னாடி டான்ஸ் ஆடுனவரைக்கும் ஒரு மாணவியாத்தான் ஆடியிருக்கேன். ஒரு டீச்சரா டான்ஸ் ஆடியிருக்கிறது இதுதான் முதல் தடவை. கேரளாவைத் தாண்டி தமிழ்நாடு வரைக்கும் அந்த டான்ஸ் வைரல் ஆகிருக்குறது ரொம்பவே ஆச்சர்யமாவும் சந்தோசமாவும் இருக்கு..” கலகல சிரிப்போடு ஷெரில் மலையாளம் கலந்து கொஞ்சமாகப் பேசும் தமிழும் நமக்குக் கொஞ்சும் தமிழாகவே இருக்கிறது. ஓணம் கொண்டாட்டத்தின்போது ஷெரில் மற்றும் குழுவினர் ஆடிய ஜிமிக்கி கம்மல் டான்ஸ்தான் 
தற்போதைய ஆன்லைன் ஹாட் ஹிட்…
ஜிமிக்கி கம்மல்
எப்படி தோணுச்சு இந்த ஐடியா..?
அந்த வீடியோவுல பார்த்த எல்லோருமே கொச்சின் ‘இந்தியன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸ்’ல உள்ள ஸ்டூடன்ட்ஸும் டீச்சர்ஸும்தான். இந்த ஐடியாவை கொடுத்தது எங்க மேனேஜர் மிதுன். ஓணம் பண்டிகை, அதே நேரம் ஆசிரியர்கள் தினமும் சேர்ந்தமாதிரி வந்தது. மாணவர்களுக்கும் 
டீச்சர்ஸுக்கும் இடையில ஒரு விரிசல் இருக்கக் கூடாதுனு இந்த டான்ஸ் ப்ளான் பண்ணினோம். மொத்தம் இருபது டீச்சர்ஸ், நாற்பது மாணவர்கள்னு ப்ராக்டிஸ் பண்ணினோம். ஆனா இந்த 
அளவுக்கு வைரல் ஆகும்னு நாங்க நினைச்சுக் கூடப் பார்க்கல.
ஜிமிக்கி கம்மல்
தமிழ்நாட்டுல இந்த வீடியோவ கொண்டாடுறாங்க தெரியுமா?
அய்யோ ரொம்பவே சந்தோசமா இருக்கு. தமிழ் ஃப்ரெண்ட்ஸோட மெசேஜ்களால என்னோட
 இன்பாக்ஸ் எல்லாம் நிறைஞ்சு கிடக்கு. எல்லோருக்குமே எனது பேரன்பும் நன்றியும்..
வீடியோ பார்த்துட்டு கிடைச்ச பாராட்டு..?
மலையாள சினிமா இண்டஸ்ட்ரியில் இருந்து நிறையப் பேர் போன் பண்ணாங்க.
 டைரக்டர் லால்ஜோஸ் அப்புறம் இன்னும் நிறையப் பேர் சோஷியல் மீடியாவுல ஷேர் 
பண்ணிருந்தாங்க. ஒரு படத்துல நடிக்கக் கேட்டாங்க. இப்போதைக்கு எதுவும் முடிவு பண்ணல.
சினிமாவுல நடிக்க இஷ்டம் இருக்கா?
ரொம்ப பிடிச்சுப் போய்தான் டீச்சரா மாறினேன். நடிப்பும் ரொம்ப இஷ்டம். ஆனா 
அதுக்கு வீட்ல ஒத்துக்கணுமே…
அப்போ தமிழ் சினிமாவுக்கு வருவீங்களா? 
என்ன இப்படி கேட்டுட்டீங்க? தமிழ் சினிமான்னா ரொம்ப இஷ்டம் சூர்யாவுக்காக வாரணம் 
ஆயிரமும், வாரணம் ஆயிரத்துக்காக சூர்யாவையும் கணக்கு வழக்கு இல்லாம பார்த்துருக்கேன். நல்ல கேரக்டர் கிடைச்சா தமிழ்ல நடிக்கவும் நான் ரெடிதான்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment