மாஸ்டர்’க்கு முன் விஜய்சேதுபதியின் படம்..பரபரப்பில் ரசிகர்கள்

‘மாஸ்டர்’ படத்திற்கு முன்பாகவே நடிகர் விஜய் சேதுபதியின் ‘க/பெ ரணசிங்கம்’

By kavitha | Published: Feb 09, 2020 06:50 AM

மாஸ்டர்’ படத்திற்கு முன்பாகவே நடிகர் விஜய் சேதுபதியின் ‘க/பெ ரணசிங்கம்’ படத்தை வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கசிந்தது தகவல். நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் படம் ‘மாஸ்டர்’. இப் படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்து வருகிறார் என்பது அறிந்த ஒன்று தான் படத்தில் அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா மற்றும் கெளரி கிஷண், வி.ஜே.ரம்யா என பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.இப்படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படப்பிடிப்பு முடியும் முன்பே இதன் அனைத்து உரிமைகளையும் சேர்ந்து சுமார் 200 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.படம் ஏப்ரல் மாதம் வெளியிடத் திட்டமிட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்படம் வெளியாகுவதற்கு முன்பே நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘க/பெ ரணசிங்கம்’ படத்தை வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவலகள் வெளியாகியுள்ளது.நடிகர் சமுத்திரக்கனி, பூ ராம் மற்றும் வேல ராமமூர்த்தி, பவானி உள்ளிட்ட பல முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.நடிகர் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்து உள்ளார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் படத்தைத் தயாரித்துள்ளது.இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கும் போதே 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி பணிகள் முடிவடையாததால், படத்தை வெளியிட முடியவில்லை. தற்போது டப்பிங் பணிகள் எல்லாம் விறுவிறுவென நடைபெற்று வரும் நிலையில் மாஸ்டருக்கு முன்னதாகவே வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Step2: Place in ads Display sections

unicc