குஷி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா.?

குஷி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா.?

விஜய் அவர்கள் நடித்த குஷி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது பாரதிராஜாவின் மகனான மனோஜ் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர். தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தளபதியின் ரசிகர்கள் மாஸ்டர் படத்திற்காக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் எஸ். ஜே. சூர்யா இயக்கத்தில் விஜய் நடித்த திரைப்படம் குஷி.  இந்த படத்தில் ஜோதிகா, மும்தாஜ், விவேக் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். தற்போது இந்த படத்தில் முதலில் நடிக்கவிருந்தது விஜய் இல்லயாம், முதலில் இந்த குஷி படத்தில் இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகனான மனோஜ் தான் நடிக்கவிருந்தாராம் அதற்கு பிறகுதான் விஜய் நடித்தார் என்று கூறப்படுகிறது.

 

Join our channel google news Youtube