• நடிகர் விஜய் சர்கார் பட வெற்றியை அடுத்து “தளபதி 63” படத்தில் நடித்து வருகிறார்.
  •  குரோம்பேட்டை வெற்றி திரையரங்க உரிமையாளர் ராகேஷ் கவுதமன் நடிகர் விஜயின் உபசரிப்பு  குறித்து ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

 

நடிகர் விஜய் “சர்கார்” பட வெற்றியை அடுத்து “தளபதி 63” படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை இயக்குநர் அட்லீ இயக்குகிறார்.மேலும் இந்த படத்திற்கு இசை புயல் இசைஅமைக்கிறார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார்.மேலும் இந்த படத்தில் பல முக்கிய பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்து கொண்டிருக்கிறார்கள்.

குரோம்பேட்டை வெற்றி திரையரங்க உரிமையாளர் ராகேஷ் கவுதமன் நடிகர் விஜயின் உபசரிப்பு  குறித்து ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். மேலும் குரோம்பேட்டை வெற்றி திரையரங்க உரிமையாளர் ராகேஷ் கவுதமன் கூறுகையில், கடந்த நவம்பர் 28-ம் தேதி நான் இரண்டாவது முறையாக நடிகர் விஜய்யை அவரது அலுவலகத்தில் சந்தித்தேன். விஜயுடன் ஒருமணி நேரம் செலவிட்டேன். அவர் என்னிடம் க்ரீன் டீ வேண்டுமா என்று கேட்டு அவரே அதை தயார் செய்தும் கொடுத்தார்” என்று கூறியுள்ளார்.

நடிகர் விஜயிடம் இருக்கும் இந்த எளிமை ராகேஷ் கவுதமனை  மிகவும் கவர்ந்ததாக கூறியுள்ளார். மேலும்இதுவே விஜயை  வெற்றிக்கு அழைத்துச் செல்வதாகவும் அவர்  பதிவிட்டுள்ளார்.