Seeman and His Wife

Seeman : நடிகை விஜயலட்சுமி அளித்த புகார்.! தனது மனைவியோடு காவல் நிலையத்தில் ஆஜரானார் சீமான்.!

By

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் , தன்னை காதலித்து திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிவிட்டார் என்று நடிகை விஜயலட்சுமி புகார் கூறி சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சில வாரங்களுக்கு முன்னர் புகார் அளித்து இருந்தார்.

இந்த புகாரை அடுத்து, புகார் அளித்த நடிகை விஜயலட்சுமியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதன் பிறகு சீமான் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டது. முதலில் சீமானுக்கு பதிலாக அவரது வழக்கறிஞர்கள் ஆஜராகி இருந்தனர்.

இதனை அடுத்து சீமான் செப்டம்பர் 18 (இன்று) வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி வேண்டும் என்று மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டு இருந்து. இதற்கிடையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடிகை விஜயலட்சுமி தனது புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டார்.

சீமான் சாருடன் நான் போனில் பேசினேன்.  இங்கு சீமானுக்கு அதிக பவர் உள்ளது. அவரை ஒன்னும் செய்ய முடியாது. நான் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளேன். என்னால் இவ்வளவு தான் போராட முடியும். நான் பெங்களூருவுக்கே செல்கிறேன் என கூறிவிட்டு சீமான் மீது அளித்த புகாரை திரும்ப பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில், புகாரை நடிகை விஜயலட்சுமி திரும்ப பெற்றாலும், சம்மன் கொடுத்தப்படி சீமான் விளக்கம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டதால், இன்று சீமான் தனது மனைவி கயல்விழி மற்றும் வழக்கறிஞர்களுடன் ஆஜாரானார். அப்போது திரளான நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் சென்னை வளசரவாக்கம் காவல் நிலைய பகுதியில் குவிந்ததால் அங்கு பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பிறகு அந்த கூட்டத்தை விலக்கி கொண்டு தனது மனைவியுடன் காவல் நிலையம் உள்ளே சென்றார்.