தளபதியின் அடுத்த படத்தை இவர்தான் இயக்க உள்ளாரா?! தளபதி 64 மாஸ் அப்டேட்!!

  • தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்
  • மோகன் ராஜா ஏற்கனவே விஜயை வைத்து வேலாயுதம் படத்தை இயக்கி உள்ளார்.
  • இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என கூறப்பட்டு வருகிறது.

தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரித்து வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படம் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து விஜய் யாருடைய இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்ற கேள்வி ரசிகர் மனதில் இருந்தது. அடுத்த படத்தை  தனி ஒருவன் , வேலைக்காரன் ஆகிய படங்களை இயக்கிய மோகன் ராஜா இயக்க உள்ளார் என்ற தகவல் கோலிவுட்டில் பரவி வருகிறது. மேலும் , இப்படத்தை கலைப்புலி.எஸ்.தாணு தயாரிக்கிறார் என்றும் , அனிருத் இசையமைக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment