திருநெல்வேலி முதல் இங்கிலாந்து வரை விஜய் சங்கரின் சாதனை !

திருநெல்வேலி முதல் இங்கிலாந்து வரை விஜய் சங்கரின் சாதனை !

விஜய் சங்கர் தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார். தற்போது  இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கையுள்ள ஆல்ரவுண்டர்களில் ஒருவர். இவருடைய ஆரம்ப கால வாழ்க்கையை கிரிக்கெட்டை சுற்றி தான் இருந்துள்ளது. இவரது தந்தை மற்றும் அவரது அண்ணன் இருவருமே தமிழ்நாடு அணிக்காக விளையாடி உள்ளனர்.   ரஞ்சி கோப்பையில் 2014 -15 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு அணிக்காக விளையாடி உள்ளார். அப்போது 111, 82, 91 ,103 என வரிசையாக நல்ல விளையாட்டை வெளிப்படுத்தியுள்ளார். இருந்தாலும் அவருக்கு இந்திய கிரிக்கெட் அணியில் கொஞ்சம் லேட்டாக தான் இடம் கிடைத்தது.
ஆனால் ஐபிஎல் போட்டியில் 2014-ம் ஆண்டு முதல் உள்ளார். 2014 -இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுஇருந்தார். அதன் பிறகு 2016 மற்றும் 17 ஆகிய ஆண்டுகளில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி உள்ளார். அப்போது இவர் அடித்த 63 ரன்கள் இவரது ஐபிஎல் உயர்ந்தபட்சக் ஒன்றாகும்.

அதன் பிறகு 2018 ஆம் ஆண்டில் டெல்லி அணியில் விளையாடி உள்ளார். கடைசியாக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு ஆதரவாக களம் இறங்கினார். இவர் இந்தியாவிற்காக தனது முதல் ஒருநாள்  கிரிக்கெட்டை இந்த ஆண்டு ஜனவரி 18-ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறங்கினார்.
டி-20 போட்டியில் 2018 மார்ச் மாதம் ஸ்ரீலங்காவுக்கு எதிராக இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். இவர் இந்திய அணியின் மத்திய பேட்டிங் தரவரிசையில் முக்கிய பங்கு வகிக்கிறார். நம்பிக்கையுள்ள பந்துவீச்சாளராகவும்  திகழ்கிறார். இதனால் இந்திய அணியில் நம்பிக்கை உள்ள ஆல்-ரவுண்டராக தற்போது இருக்கிறார் .

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான தவானுக்கு காயம் காரணமாக விஜய் சங்கர் உலகக் கோப்பை இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ளார்.
இந்நிலையில்நேற்று நடந்த உலக கோப்பையில் முதலில்  களமிறங்கிய இந்திய அணி  இறுதியாக 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 336 ரன்கள் குவித்தது.

நேற்றைய  போட்டியில் ஐந்தாவது ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். அந்த ஓவரில் நான்காவது பந்துவீசும் போது கால் தடுமாறியதால் புவனேஷ்குமார் வெளியேற அவருக்கு பதில் விஜய் ஷங்கர் மீதமுள்ள 2 பந்துகளை வீசினார். அப்போது முதல் பந்தில் இமாம்-உல்-ஹக் விக்கெட்டை பறித்தார்.
பின்னர் 35 -வது வீசியபோது பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அகமது முதல் பந்திலே விக்கெட்டை பறிகொடுத்தார்.இப்போட்டியில் 5.2 ஓவர் வீசி 22 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டை பறித்தார்.இதனால் இந்திய அணி வெற்றி பெற பெரும் உதவியாக இருந்தது.
 

author avatar
murugan
Join our channel google news Youtube