விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் வெளியாகவில்லை….?

இயக்குனர் விஜய்சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நிவேதா பெத்துராஜ்,  ராசி கன்னா மேலும் சிலர் நடிப்பில் உருவான திரைப்படம் சங்கத்தமிழன் . இந்த திரைப்படத்தை விஜயா புரொடக்சன்ஸ் நிறுவனம்  தயாரித்து உள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்.
மேலும் இந்த திரைப்படம் தீபாவளிக்கு முன் வெளியாகும் என படக்குழு அறிவித்த நிலையில் விஜய் நடிப்பில் உருவான பிகில் திரைப்படமும் கார்த்தி நடித்திருந்த கைதி படமும் வெளியானதால் சங்கத்தமிழன் பின் வாங்கியது.
இந்நிலையில் படக்குழுவினர் இன்று நவம்பர் 15ம் தேதி வெளியாகும் என  படக்குழு அறிவித்திருந்த நிலையில் இன்றும் வெளியாகவில்லை . மேலும் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் வினியோகஸ்தர்களுக்கு தரவேண்டிய பண பாக்கிகள் தயாரிப்பு நிறுவனம் தராததால் விஜய் சேதுபதி நடித்த சங்கத்தமிழன் திரைப்படம் வெளியாகவில்லை

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.