நடிகர் விஜய் சேதுபதி வெளியில் தெரியாமல் பல உதவிகளை பலருக்கும் செய்து வருகிறார். இவர் செய்யும் உதவிகள் பற்றிய தகவல்கள் அடிக்கடி வெளிவருவதும் உண்டு. இதனால் அவருடைய ரசிகர்கள் அவரை பாராட்டுவதும் உண்டு. அந்த வகையில், விஜய் சேதுபதி சமீபத்தில் செய்த பெரிய உதவி பற்றிய தகவல் ஒன்றை இயக்குனரும், பெப்சி தலைவருமான ஆர்கே செல்வமணி கூறியுள்ளார்.

பெப்சி யூனியனில் பணிபுரியும் 250 பேருக்கு வீடு கட்ட பண பிரச்சனை இருந்தபோது. அவர்களுக்கு விஜய் சேதுபதி தலா 50,000 விதம் 1 கோடியே 40 லட்சம் கொடுத்து அவர் பெரிய உதவியை செய்துள்ளார். ஆர்கே செல்வமணியை விஜய் சேதுபதி சந்தித்தபோது உங்களுக்கு எண்ணவேண்டும் என்று கேட்டுள்ளார்.

அதற்கு ஆர்கே செல்வமணி பீல்டிங் கட்டுவதற்கு 1 கோடி 40 லட்சம் வேண்டும் என்று கேட்க அதற்கு விஜய் சேதுபதி நான் ஒரு விளம்பர படத்தில் நடித்து கொண்டு இருக்கிறேன். அதில் இருந்து 1 கோடி 10 லட்சம் சம்பளம் வரும் அதை நீங்களே வாங்கிகொள்ளுங்கள் என்று கூறிவிட்டாராம்.

மேலும், 30 லட்சம் குறைவாக இருப்பதை அறிந்த அவர் உடனே அந்த தொகையும் கொடுத்து உதவியுள்ளார். இதற்கு நன்றியும் தெரிவித்து இந்த விஷயத்தை மக்களுக்கு சமீபத்திய பேட்டி ஒன்றின் மூலம் ஆர்கே செல்வமணி தெரிய வைத்துவிட்டார். 250 குடும்பங்களுக்கு பெரிய உதவி செய்த விஜய் சேதுபதியை பலரும் பாராட்டி வருகிறார்கள்.