,

அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக புஷ்பா 2-வில் களமிறங்கும் விஜய் சேதுபதி.!?

By

கடந்த ஆண்டு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான திரைப்படம் புஷ்பா. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடித்திருந்தார். பஹத் பாசில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவ் ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. படமும் அருமையாக இருந்ததால், 50 நாட்களுக்கு மேலாக திரையரங்குகளில் ஓடி 350 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது.

புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்திற்கான கதை எழுதும் பணியை இயக்குனர் சு.குமார் முடித்துவிட்டாராம். அதன்படி, வரும் ஜூலை மாதத்திலிருந்து புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்த திரைப்படத்தில் வில்லனாக நடிக்க வைக்க நடிகர் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்தில் விஜய் சேதுபதி முக்கிய உயர் போலீஸ் அதிகாரியக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பேச்சு வார்த்தை முடிந்த பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.