சிவகார்த்திகேயனின் படத்தன்று ரிலீஸாகவுள்ள விஜய்சேதுபதி படம்..!

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தன்று விஜய்சேதுபதியின் முகிழ் படம் ரிலீஸாகவுள்ளது.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு, வினய்  உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் சிவகார்திகேயனிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துள்ளார். தற்போது இந்த படம் வருகிற அக்டோபர் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் நடிகர் விஜய்சேதுபதியின் முகிழ் படம் அதே நாளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ரெஜினா நடித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் கார்த்திக் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தை விஜய்சேதுபதியின் சொந்த நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.