ஐடி ஊழியரின் கரம்பிடிக்கும் விஜய் சேதுபதி பட நடிகை.! விரைவில் நிச்சயதார்த்தம் நடத்த முடிவு.!

ஐடி ஊழியரின் கரம்பிடிக்கும் விஜய் சேதுபதி பட நடிகை.! விரைவில் நிச்சயதார்த்தம் நடத்த முடிவு.!

விஜய் சேதுபதி பட நடிகையான நிஹாரிகா கொனிதேலாவிற்கு ஆகஸ்ட் 13ம் தேதி ஐடி ஊழியருடன் நிச்சயதார்த்தம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான "ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்" படத்தில் நடித்தவர் தான் நிஹாரிகா கொனிதேலா. அதனையடுத்து இவர் தெலுங்கிலும் ஒரு சில படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்திருந்தார்.

சமீபத்தில் ஆந்திர மாநில குண்டூர் ஐஜி பிரபாகர் ராவ் என்பவரின் மகனான Venkata chaitanya jonnalagadda என்ற ஐடி துறையில் பணிபுரிபவரை நிஹாரிகா விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும், அவருடன் இணைந்துள்ள புகைப்படத்தையும் நிஹாரிகா பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் தற்போது இவர்களது நிச்சயதார்த்தத்தை வரும் ஆகஸ்ட் 13ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் டிசம்பர் மாதத்தில் திருமணத்தை நடத்தவும் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் நடிகர் சிரஞ்சீவியின் சகோதரரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Posts

தீபிகா படுகோனிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை..!
தேசிய தேர்வாணையம் நீட் தேர்வுக்கான விடைகளை வெளியிட்டுள்ளது!
விவசாய விரோத முதலமைச்சர் பழனிசாமி - டி.ஆர்.பாலு
20 லட்சம் பேர் வரை உயிரிழப்பதை தடுக்க முடியாது - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
ரசிகர் தவறவிட்ட காலணியை கையில் எடுத்து கொடுத்த விஜய்..!
பார்வையிழந்த ரசிகருக்கு எஸ்.பி.பி கொடுத்த சர்ப்ரைஸ் - இணையத்தை கலக்கும் வீடியோ!
நாம் தமிழர் கட்சி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் - சீமான்!
தந்தை ,மகன் கொலை வழக்கு - குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த சிபிஐ
பங்களாதேஷில் கல்லூரி ஆண்களால் விடுதிக்கு கணவருடன் வந்த பெண் பாலியல் பலாத்காரம்!
#BREAKING: பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல்.. ஹெச்.ராஜா பெயர் இடம் பெறவில்லை..!