படப்பிடிப்பின் போது விஜய் – கார்த்தி சந்திப்பு.!

படப்பிடிப்பின் போது விஜய் – கார்த்தி சந்திப்பு.!

பீஸ்ட் மற்றும் சர்தார் படங்களின் படப்பிடிப்பின் போது நடிகர் கார்த்தி, விஜய் இருவரும் சந்தித்து உரையாடியுள்ளார்.

நடிகர் விஜய் தற்போது “பீஸ்ட்” படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில்ம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் தொடங்கப்பட்டு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதைபோல் நடிகர் கார்த்தி தற்போது இயக்குனர் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் “சர்தார்” படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பும் சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

sardar and beast

விஜய் – கார்த்தி சந்திப்பு:

இந்நிலையில், இன்று கோகுலம் ஸ்டுடியோவில் பீஸ்ட் மற்றும் சர்தார் படங்களின் படப்பிடிப்பின் போது நடிகர் கார்த்தி, விஜய் சந்தித்து உரையாடியுள்ளார். கார்த்திக்கு சர்தார் திரைப்படம் வெற்றி பெற நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அதன் பிறகு கார்த்தியும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துளளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube