seeman

அரசியலில் விஜய்.. தம்பியை தட்டி கொடுக்க வேண்டும்.! சீமான் பேச்சு..!

By

லியோ படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகவும் பிரமாண்டமாக நடந்தது. இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய்,  சினிமாவை சினிமாவாக பாருங்கள், உலக முழுக்க சினிமாவை அப்படிதான் பார்க்கிறார்கள். சினிமா மக்கள் விரும்பும் பொழுது போக்கு அம்சம்.

   
   

மேலும், 2026ஆவது ஆண்டு குறித்த கேள்விக்கு ‘கப்பு முக்கியம் பிகிலு’ என நடிகர் விஜய் ஒரே வார்த்தையில் பதில் அளித்தார். நடிகர் விஜயின் இந்த பதிலுக்கு பலரும் விஜய் அரசியலுக்கு வருவதை சூசகமாக கூறியிருப்பதாக தெரிவித்து வருகின்றனர். 

Rain Alert: தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை!

இந்த நிலையில், இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், ‘அரசியல் கட்சி தொடங்க நடிகர் விஜய்-க்கு கனவு,அவருக்கு எனது வாழ்த்து. நடிகர் விஜய் முதுகுக்கு பின்னால் செய்ய வேண்டியது தட்டிக்கொடுப்பது மட்டுமே என தெரிவித்துள்ளார்.

மேலும், விபத்து விதியாகிவிடாது, எம்ஜிஆரை போன்று அரசியலுக்கு வந்த உடன் வெற்றிபெறுவது எளிதல்ல. கட்சி தொடங்கிய உடன் வெற்றி பெற்றால் அது பெரும்புரட்சிதான். நாங்கள் யாரோடும் கூட்டணி இல்லை. எங்களோடு யார் வேண்டுமானாலும் கூட்டணிக்கு வரலாம்.

Dinasuvadu Media @2023