ரசிகர் தவறவிட்ட காலணியை கையில் எடுத்து கொடுத்த விஜய்..!

ரசிகர் தவறவிட்ட காலணியை கையில் எடுத்து கொடுத்த விஜய்..!

தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் வைக்கப்பட்ட எஸ்.பி.பி உடலுக்கு, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நேரில் அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து, நடிகர் விஜயும் நேரில் அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திவிட்டு நடிகர் விஜய் திரும்பியபோது ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். அப்போது, தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ரசிகர் ஒருவர் தவறவிட்ட காலனியை நடிகர் விஜய் குனிந்து தனது கையால் காலனியை  எடுத்துக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மறைந்த பின்னணி பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைக்கொண்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நேற்று மாலை நுங்கம்பாக்கம் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், எஸ்.பி.பி யின் உடல் நேற்று இரவு தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இங்கு மக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Posts

எக்காரணத்தையும் காட்டி இலவச மடிக்கணினி, மிதிவண்டி வழங்குதலை கைவிட கூடாது - பாமக ராமதாஸ்!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு..!
டெல்லியில் காற்று மாசு ஏற்படுத்தினால் ரூ.1 கோடி அபராதம்! 5 ஆண்டுகள் சிறை!
சுப்பையா சண்முகத்தை உறுப்பினராக நியமித்திருப்பது, பச்சை அதிகார துஷ்பிரயோகம் - மு.க.ஸ்டாலின்
காஷ்மீரில் பயங்கரவாதிகள் - பாதுகாப்பு படையினர் இடையே மோதல்.. 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!
விடிய விடிய பெய்த கனமழையால் கடல் போல காட்சி தரும் சென்னை அண்ணா சாலை!
8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..... வானிலை ஆய்வு மையம்..!
முட்டை விலை 15 காசுகள் குறைந்து 4.75 க்கு விற்பனை...!
#IPL 2020: KKR கனவை தடுக்குமா CSK...?
தொடங்கியது பருவமழை! தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட்!