விஜய்யை மன்னிக்க முடியாது..! அமைச்சர் செல்லூர் ராஜூ

மக்கள் நல திட்டங்களை எரிக்கும் காட்சியில் விஜய் நடித்தது மன்னிக்க முடியாத குற்றம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Image result for விஜய்

இது தொடர்பாக மதுரையில்  அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், விஜய் நல்ல நடிகர், எதிலும் முத்திரை பதிக்க வேண்டும் என நினைப்பவர். ஆனால் சர்கார் படத்தில் மக்கள் நல திட்டங்களை எரிக்கும் காட்சியில் நடிகர் விஜய், முருகதாஸ் நடித்தது மன்னிக்க முடியாத குற்றம்.ஜெயலலிதா இருக்கும்போது மக்கள் நல திட்டங்களை வாழ்த்தி பேசிய விஜய், இப்போது படத்தில் எதிர்க்கிறார் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.