நடிகர் விஜய் ஆண்டனி மகளின் உடல், சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் லாரா(16) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழ் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 12 வகுப்பு படித்து வரும் லாரா கடந்த சில நாட்களாகவே மன சோர்வாக இருந்ததாகவும், செப்டம்பர் 19 அதிகாலை 3 மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், இன்று காலை மீராவின் இறுதி ஊர்வலம் சற்றுமுன் தொடங்கியது. குடும்ப உறுப்பினர்கள், திரைத்துறையினர், பொதுமக்கள் மீராவின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய நிலையில், ஊர்வலம் தொடங்கி நுங்கம் பாக்கத்தில் உள்ள தேவாலயத்தில் மீராவின் உடலுக்கு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இதனையடுத்து இறுதி ஊர்வலத்தின் போது, மகளின் உடலை பார்த்து பார்த்து விஜய் ஆண்டனி அழுதுக் கொண்டே சென்றார். இறுதியாக, விஜய் ஆண்டனியின் மகன் மீராவின் உடல், சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.