• அருண் விஜய் நடிப்பில், பாக்ஸர் , ,அக்னி சிறகுகள் என இரு படங்கள் தயாராகி வருகிறது.
  • அக்னி சிறகுகள் படத்தில் விஜய் ஆண்டனி உடன் நடிக்க உள்ளார்.
  • அந்த படத்தை மூடர் கூடம் பட இயக்குனர் நவீன் இயக்க உள்ளார்.

என்னை அறிந்தால் படத்தில் தல அஜித்திற்கு மிரட்டலான வில்லனான பிறகு வெகுவான ரசிகர்களை ஈர்த்துள்ளார் நடிகர் அருண் விஜய். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான தடம் திரைப்படம் நல்ல வெற்றியை பதிவு செய்து வருகிறது. அதற்கடுத்ததாக பாக்ஸர், அக்னி சிறகுகள் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

இதில் அக்னி சிறகுகள் படத்தை ‘மூடர் கூடம்’ படத்தை இயக்கிய நவீன் இயக்க உள்ளார். இப்படத்தில் அருண் விஜய் உடன் விஜய் ஆண்டனியும் உடன் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கான மேக்கப் டெஸ்ட் அண்மையில் நடைபெற்றது. இதில் அருண் விஜய், ,என்னை அறிந்தால் பட விக்டர் கெட்ப்பில் ஸ்டைலாக இருக்கிறார். இந்த புகைப்படம் ரசிகர்களால் விரும்பப்பட்டு வருகிறது.

DINASUVADU