நயன்தாராவிற்கு ஆறுதல் கூறுகிறாரோ விக்னேஷ் சிவன்.! வைரல் வீடியோ உள்ளே.!

பிரபல இயக்குநரான விக்னேஷ் சிவன் நானும் ரவுடி தான் படத்திலுள்ள 'கண்ணான கண்ணே

By ragi | Published: Jun 03, 2020 09:20 AM

பிரபல இயக்குநரான விக்னேஷ் சிவன் நானும் ரவுடி தான் படத்திலுள்ள 'கண்ணான கண்ணே கலங்காதடி' பாடலை வெளியிட்டது மிகவும் வைரலாகி வருகிறது.

கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான காதல் ஜோடிகளாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை கூறலாம். 2015ல் வெளியான நானும் ரவுடி தான் படத்தின் மூலம் தான் இவர்கள் இருவரின் காதல் ஆரம்பித்தது என்பது அனைவரும் அறிந்ததே. லிவ்விங் ரிலேஷன்சிப்பில் இருக்கும் இந்த ஜோடியின் வீட்டிற்குள் இருந்து சமூக விலகலை கடைபிடித்து வருகின்றனர். மேலும் அடிக்கடி அவர்கள் இருவரும் இணைந்துள்ள புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார் விக்னேஷ் சிவன். இவர்களது திருமணம் விரைவில் இருக்கும் என்று கருதப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியை நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான நானும் ரவுடி தான் படத்திலிருந்து 'கண்ணான கண்ணே' பாடலுடன் கூடிய ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை அவர் ஒரு படத்திற்காக இடம் பார்க்க சென்ற போது ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் ஷூட் செய்ததாகவும், தற்போது அதனை எடிட் செய்து தந்ததாகவும் கூறியுள்ளார். வழக்கமாக தனது காதலியை மறைமுகமாக குறிக்கும் விக்னேஷ் சிவன் இந்த பாடல் வரிகள் மூலம் எதையாவது சொல்ல நினைக்கிறீர்களா என்று ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர். மேலும் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. விக்னேஷ் சிவன் தற்போது நயன்தாரா, சமந்தா மற்றும் விஜய் சேதுபதியை வைத்து 'காத்து வாக்குல ரண்டு காதல்' என்ற படத்தை இயக்குவது குறிப்பிடத்தக்கது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

?? #kannanakanney #throwback #Recce @dineshkrishnandop shot this n edited ???? #SillySundayPosts

A post shared by Vignesh Shivan (@wikkiofficial) on

Step2: Place in ads Display sections

unicc