ஜூன் 1-ம் தேதி முதல் உயர்நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்கு விசாரணை!

ஜூன் 1-ம் தேதி முதல் உயர்நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்கு விசாரணை. தமிழகம்

By leena | Published: May 30, 2020 03:41 PM

ஜூன் 1-ம் தேதி முதல் உயர்நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்கு விசாரணை.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனையடுத்து, ஊரடங்கு அமலில் உள்ளதால் நீதிபதிகள் தங்களது இல்லத்தில் இருந்தே வழக்குகளை விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், பார் கவுன்சில் மற்றும் வழக்கறிஞர் சங்கங்கள், உரிய பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, உயர்நீதிமன்றத்தில் நாளை மறுநாள் முதல் 33 அமர்வுகள் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக வழக்குகளை விசாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீதிபதிகள் தங்களது மடிக்கணினி அல்லது ஐ-பேடை நீதிமன்றத்திற்கு கொண்டுவர வேண்டும் என்று பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc