கலைஞர் சிலையை திறந்து வைத்தார் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு.!

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் ரூ.1.17 கோடி செலவில் சுமார் 16 அடி உயரத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலையை சுற்றி மெழுகுப்பூச்சுடன் கூடிய கருங்கற்கள் பதிக்கப்பட்டு உள்ளன.

இன்று மாலை 5:30 மணிக்கு சிலை திறப்பு விழா நடந்தது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த விழாவில், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் சிலையை திறந்து வைத்தார். பின்னர் வெங்கையா நாயுடு, ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

மேலும், இந்த விழாவில், தமிழக அமைச்சர்கள், தி.மு.க., எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here