27 C
Chennai
Tuesday, October 26, 2021

விறுவிறுப்பான வாக்கு எண்ணிக்கை – திமுக கூட்டணி முன்னிலை நிலவரம் இதோ!

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை நிலவரம்.

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒன்றியம் மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதிவில் இடங்களில் தொடர்ந்து திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

அந்தவகையில், மொத்தம் 140 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களில் திமுக கூட்டணி 45 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. அதன்படி காஞ்சிபுரம் 5, செங்கல்பட்டு 8, வேலூர் 6, ராணிப்பேட்டை 5, திருப்பத்தூர் 5, விழுப்புரம் 5, கள்ளக்குறிச்சி 3, நெல்லை 4 மற்றும் தென்காசியில் 4 ஆகிய இடங்களில் முன்னிலையில் உள்ளது.

இதுபோன்று, 1381 ஒன்றிய கவுன்சிலர் பதிவு இடங்களில் திமுக கூட்டணி 68 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காஞ்சிபுரம் 23, செங்கல்பட்டு 4, வேலூர் 10, ராணிப்பேட்டை 5, திருப்பத்தூர் 4, விழுப்புரம் 13, கள்ளக்குறிச்சி 4, நெல்லை 3 மற்றும் தென்காசியில் 2 ஆகிய இடங்களில் முன்னிலையில் உள்ளது.

ஒன்றிய கவுன்சிலர் பதவி இடங்களில் அதிமுக 2 மற்றும் மற்றவை 5 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

spot_imgspot_img

Hot Topics

Read More