தளபதியுடன் வெற்றிமாறன் கூட்டணி உறுதி.!

தளபதியுடன் வெற்றிமாறன் கூட்டணி உறுதி.!

தளபதியின் அடுத்த படத்தை வெற்றிமாறன் இயக்குவதை தளபதியின் மகள் உறுதி செய்துள்ளார்.

தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வெற்றிமாறன். அதனையடுத்து பல படங்களை தனுஷூடன் இணைந்து இயக்கி பிரபல இயக்குநர்களில் ஒருவராக வலம் வருகிறார். தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் ஆகிய படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. அது மட்டுமின்றி தனஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் மற்றும் வெற்றிமாறனின் தயாரிப்பு நிறுவனமான கிராஸ்ரூட் இணைந்து காக்கா முட்டை உட்பட பல படங்களை தயாரித்தும் வெற்றியை பெற்றிருந்தது.

தற்போது இயக்குநர் வெற்றிமாறன் சூரி அவர்களை வைத்து ஒரு படத்தையும், சூர்யாவின் வாடிவாசல் படத்தையும் இயக்கவுள்ளார்.சமீபத்தில் இவர் விஜய் அவர்களுக்காக கதை எழுதும் பணியை ஆரம்பித்துள்ளதாக கூறியிருந்தார். இந்த நிலையில் intru  தனது பிறந்தநாளை கொண்டாடும்   வெற்றிமாறன் அவர்களுக்கு பல பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் . அந்த வகையில் தளபதி விஜய்யின் மகளான திவ்யா அவர்கள் வெற்றிமாறன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்ததோடு, சூர்யாவுடன் ஆன வாடிவாசல் படத்தை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும், தனது அப்பாவுடனான அடுத்த புராஜெக்ட்டுக்காக செம வெயிட்டிங்கில் உள்ளதாக கூறியுள்ளார். இதிலிருந்து தளபதி 66 படத்தை வெற்றிமாறன் இயக்கலாம் என்று கருதப்படுகிறது.

Join our channel google news Youtube