வெங்கட் பிரபு வில்லனாக நடித்துள்ள ‘லாக்கப்’ படம் ஓடிடியில் ரிலீஸா.?

வெங்கட் பிரபு மற்றும் வைபவ் நடித்து முடித்துள்ள லாக்கப் படத்தை ஓடிடியில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா தொற்று காரணமாக சினிமாத் துறை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் மூடப்பட்டதன் காரணமாக ரிலீஸ்க்கு தயாராக இருந்த பல படங்கள் ஓடிடியில் ரிலீஸ் செய்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ மற்றும் கீர்த்தி சுரேஷின் ‘ பெங்குயின்’ ஆகிய படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீஸாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. அது மட்டுமின்றி காயத்ரி ரகுராம் அவர்களின் ‘யாதுமாகி நின்றாய்’ என்ற படமும் Zee5 தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. மேலும் வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‘டேனி’ என்ற படமும்  Zee5 ல் ரிலீஸ் செய்யப்படவுள்ளது.

இந்த நிலையில் தற்போது அடுத்ததாக இயக்குநர் வெங்கட் பிரபு வில்லனாக நடிக்கும் ‘லாக்கப்’என்ற படமும் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அறிமுக இயக்குனரான எஸ். ஜி. சார்லஸ் இயக்கத்தில் நடிகர் நிதின் சத்யா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லாக்கப். இந்த படத்தில் வைபவ் ஹீரோவாகவும், வாணிபோஜன் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். மேலும் இயக்குநர் வெங்கட் பிரபு வில்லனாக நடித்துள்ளார். அரோல் கோரெல்லி இசையமைக்கும் இந்த படத்தை Zee5 தளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Recent Posts

ராகுல்- டிகாக் கூட்டணியில் சரிந்த சிஎஸ்கே ! தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த லக்னோ!

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…

6 hours ago

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

8 hours ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

10 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

11 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

11 hours ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

11 hours ago