வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு ரத்து- சென்னை உயர்நீதிமன்றம்..!

முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டத்தை அடுத்துவரும் ஆட்சி பின்பற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.

சமீபத்தில் வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்திற்கு உட்பட பகுதிகளில் முதுகலை படிப்பில் சேர விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டார்.

இந்த அறிவுப்புக்குத் தடை விதிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை அமர்வு, ஆட்சி என்பது சைக்கிள் போல மாறி மாறி வரும்; முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டத்தை அடுத்துவரும் ஆட்சி பின்பற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.

மேலும், விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழக வரம்புக்குட்பட்ட பகுதியில் முதுகலை படிப்புகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்று வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு ரத்து செய்து  முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.

 

author avatar
murugan