வேலூர் குடியாத்தம் இடைத்தேர்தல்! முதற்கட்ட பணிகள் தொடக்கம்!

வேலூர் குடியாத்தம் இடைத் தேர்தல் முதற்கட்ட பணிகள் தொடக்கம்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம், தொகுதியின் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் உயிரிழந்த நிலையில் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.  இந்நிலையில் இத்தொகுதியில் இடைதேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை செய்ய இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தநிலையில், இடைத்தேர்தல் நடத்துவதற்கான முதற்கட்ட பணிகள்  தொடங்கியுள்ளது.

இதனையடுத்து, முதற்கட்டமாக மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் நடைபெற்றன.  இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தொடங்கி வைத்தார். அனைத்து கட்சி பிரமுகர்கள் மத்தியில், வேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூட மையத்தில் வைத்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.