வேலூர் தேர்தல் அடுத்த அரசியல் மாற்றத்திற்கான ஒரு சமிக்கையாக இருக்குமா?

வேலூர் தேர்தல் அடுத்த அரசியல் மாற்றத்திற்கான ஒரு சமிக்கையாக இருக்குமா?

பணப்பட்டுவாடா புகார்  காரணமாக ஓத்திவைக்கப்பட்ட வேலூரில் மக்களவை தேர்தல்  வருகின்ற 5 ஆம் தேதி நடைபெறுகிறது.அதிமுக  சார்பில் புதியநீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.திமுக சார்பில் துரை முருகனின் மகன் கத்தி ஆனந்த் போட்டியிடுகிறார்.நாம் தமிழர் கட்சியின் சார்பாக தீபலட்சுமி என்பவர்  போட்டியிடுகிறார்.

மூன்று கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதவராக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் நேற்று  அதிமுக கூட்டணி வேட்பாளர் சண்முகத்தை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது அவர் கூறுகையில்,சதுரங்கவேட்டை திரைப்படத்தின் நாயகன் போல் ஆசை வார்த்தைகளை ஸ்டாலின் கூறிவருகிறார் என்று தெரிவித்தார்.

 

நேற்று  திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தில் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,நீட் தேர்விற்கு விலக்கு வாங்கி தருவதாக மக்களை ஏமாற்றியுள்ளது.2 வருடங்களுக்கு முன்பே, தமிழக அரசு அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்டத்தை அ.தி.மு.க. அரசு அறிந்தும், மக்களுக்குத் தெரியப்படுத்தாமல் மறைத்து ஏமாற்றியுள்ளது. வேலூர் மக்களவை  தொகுதி தேர்தலுக்காக அ.தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது என்று குற்றம்சாட்டினார்.

இன்றுடன் வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் பிரச்சாரம் முடிவடைய உள்ள நிலையில் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

நடந்து முடிந்த மக்களவை மற்றும் இடைத்தேர்லில் திமுக கூட்டணி தனது வாக்கு வங்கியை கணிசமாக உயர்த்தியுள்ளது.அதேபோல் அதிமுக தனது வாக்கு வங்கி உயர்துள்ளது என்று சொன்னாலும் ஜெயலலிதா இருக்கையில் தனித்தும் தற்பொழுது கூட்டணி கட்சிகளோடு களத்தில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.ஆனால் தற்போது தேர்தல் நடைபெறுவது என்னவோ ஒரு தொகுதியாக இருந்தாலும் அதன் வெற்றிதான் சட்டமன்ற தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்று தெளிவாக தெரிகிறது.இந்த தேர்தலில் வெற்றிபெறும் கட்சி சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிபெற வாய்ப்பு அதிகம் உள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். வேலூர் தேர்தல் அடுத்த அரசியல் மாற்றத்திற்கான ஒரு சமிக்கையாக பார்க்கப்படுகிறது.

Join our channel google news Youtube