கோவிலுக்குள் நுழைந்த சைவ முதலை – 70 ஆண்டுகளில் இதுவே முதல் முறை.!

கேரளாவில் உள்ள கோவிலுக்குள் நுழைந்த சைவ முதலை பூசாரி சொன்னதும் குளத்துக்குள் சென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஆனந்தபுரம் கிராமத்தில் ஏரியின் நடுவே உள்ள அனந்தபத்மநாப ஸ்வாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. 70 ஆண்டு காலமாக இந்த ஏரியில் ஒரு முதலை வசித்து வருவதாக அங்குள்ள மக்கள் கூறியுள்ளதுடன், அந்த முதலையை பபியா எனவும் பெயரிட்டு மக்கள் அழைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த முதலை இதுவரை ஏரியில் இருந்து அந்த கோவிலுக்குள் வந்ததே கிடையாதாம். ஆனால் முதன்முறையாக நேற்று முன்தினம் இந்த முதலை கோவிலுக்குள் நுழைந்து உள்ளது. இந்த முதலை அசைவம் எதுவுமே சாப்பிடாமல், வெறும் சைவ உணவுகளை மட்டும் தான் சாப்பிடுமாம். மேலும் கோவில் பிரசாதத்தை இது விரும்பி சாப்பிடும் எனவும் பலர் கூறிவருகின்றன.
இது அசைவ உணவுகள் சாப்பிடாத முதலை என்றாலும் 70 ஆண்டு பழமையான பெரிய முதலை என்பதால் கோவில் வளாகத்திற்குள் நுழைந்ததும் அங்கிருந்த அனைவரும் பயந்து அலறி உள்ளனர். ஆனால் அந்த முதலையை கோவில் பூசாரி சந்திரபிரகாஷ் நம்பீசன் என்பவர் உள்ளே போ என லேசாக அதட்டியபடி கூறியதும் உடனடியாக அந்த முதலை விறுவிறுவென ஏரிக்குள் இறங்கி விட்டதாம். பூசாரியின் சொல்லுக்கு முதலை உடனடியாக கட்டுப்பட்டது அங்கு உள்ள பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
author avatar
Rebekal