20 மில்லியன் பார்வையாளர்களின் மனம் கவர்ந்த 'வெய்யோன் சில்லி' பாடல்.!

20 மில்லியன் பார்வையாளர்களின் மனம் கவர்ந்த 'வெய்யோன் சில்லி' பாடல்.!

சூரரை போற்று படத்திலுள்ள வெய்யோன் சில்லி பாடல் 20மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

நடிகர் சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தை சுதா கோங்குரா இயக்குகிறார். மேலும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் சம்பத் ராஜ், கருணாஸ், ஜாக்கி ஷ்ரூஃப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. ரிலீஸ்க்கு தயாராக இருந்த படம் கொரோனா தொற்று காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்த படத்திற்கு யூ சான்றிதழ் வழங்கியது குறிப்பிடத்தக்கது.இந்த படத்திலுள்ள அனைத்து பாடல்களும் ரசிகர்களின் பேவரட்டாக மாறியுள்ளது இந்த நிலையில் தற்போது சூரரை போற்று படத்திலுள்ள வெய்யோன் சில்லி பாடலின் லிறிக்கல் வீடியோ யூடுபில் 20 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. இதனை சூர்யா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

 

Latest Posts

சென்னையை வீழ்த்தி டெல்லி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
சென்னை அணிக்கு 176 ரன்கள் நிர்ணயித்த டெல்லி..!
சீனாவின் ஹவாய் ஆராய்ச்சி ஆய்வகத்தில் தீ விபத்து.!
தாமரைபாக்கம் இல்லத்தில் எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை
பாடகர் எஸ்.பி.பி உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் - முதல்வர்
லடாக்கின், லேவில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்.!
கருப்பு பேண்ட் அணிந்து விளையாடும் சென்னை, டெல்லி அணி வீரர்கள்..!
டெல்லியில் இன்று 4,061 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.!
அனைத்து வரம்புகளையும் கடந்து அனைத்து தரப்பினரையும் கவர்ந்த பேராளுமை எஸ்பிபி - திருமாவளவன்
முழு அரசு மரியாதையுடன் நடைபெற  முதலமைச்சர் ஆவன செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின்