#BREAKING: புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி 2% குறைப்பு..!

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி 2% குறைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் மீதான விலை அதிகரித்து வண்ணம் உள்ளது. சில மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை ரூ.100 தாண்டி விற்பனை செய்து வருகிறது.

மேகாலயா, மேற்கு வங்கம் போன்ற சில மாநிலங்களில் வாட் வரி குறைத்துள்ள நிலையில், புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி 2% குறைந்து துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதுச்சேரியில் வாட் வரி குறைக்கப்பட்டுள்ளதால் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.40 காசுகள் குறைய வாய்ப்புள்ளது. புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி உயர்த்தப்பட்டிருந்ததது.

author avatar
murugan