வசந்தி ஸ்டான்லியின் மறைவு திமுகவிற்கு இழப்பு-  மு.க.ஸ்டாலின்

வசந்தி ஸ்டான்லியின் மறைவு அவரது குடும்பம் மட்டுமின்றி திமுகவுக்கும் இழப்பு  என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உடல்நலக்குறைவால்  திமுக முன்னாள் எம்.பி வசந்தி ஸ்டான்லி காலமானார்.இந்நிலையில்  மறைந்த திமுக முன்னாள் எம்.பி. வசந்தி ஸ்டான்லி உடலுக்கு ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனி இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

இதன்பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், கவிஞர், எழுத்தாளர், திமுக பேச்சாளராக விளங்கியவர் வசந்தி ஸ்டான்லி. வசந்தி ஸ்டான்லியின் மறைவு அவரது குடும்பம் மட்டுமின்றி திமுகவுக்கும் இழப்பு .திமுகவின் செயல் வீராங்கனையாக இருந்தவரின் மறைவால் துயரமடைந்தேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Leave a Comment