மீண்டும் உருவாக்கப்படும் துருவ் நடிக்கும் வர்மா பட ஹீரோயின் இவர்தான்!!

தெலுங்கில், விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெற்றி பெற்ற ‘அர்ஜூன் ரெட்டி’ திரைப்படம் தமிழில் வர்மா என்ற பெயரில் தயாரானது. பாலா இயக்கி இருந்தார். விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடித்து இருந்தார். இ4 என்டெயிர்டென்ட்மென்ட் இப்படத்தை தாயாரித்திருந்தது.

இப்படத்தின் ட்ரெய்லர் , பாடல் என வெளியாகி இருந்தது. பட ரிலீஸ்  தேதியும் ஏறக்குறைய உறுதியானது. ஆனால் படத்தினை முழுதாய் பார்த்த படக்குழுவிற்கு படம் பிடிக்கவில்லையாம். ஆதலால் படத்தை ரிலீஸ் செய்யாமல் மீண்டும் வேறு ஒரு இயக்குனரை கொண்டு படமாக்க திட்டமிட்டு இருந்தது.

இந்நிலையில்  படத்தினீ ஹீரோ துருவ் விக்ரமை மட்டுமே வைத்து கொண்டு மற்ற அனைவரையும் புதிதாக களமிறக்க படக்குழு முடிவு செய்து விட்டது. ஆதனை தொடர்ந்து, தற்போது படத்தின் ஹீரோயினாக பஞ்சாப் மாடல் அழகி பனிடா சாந்து (panita sandhu) நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே பாலிவுட்டில் வருண் தவான் நடித்திருந்த அக்டோபர் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment