சிவனுக்கே மாஸ்க் அணிவித்த அர்ச்சகர்கள்! அதீத பாசம் வைத்த வாரணாசி பக்தர்கள்!

டெல்லி, உத்திர பிரதேசம் போன்ற வடமாநிலங்களில் காற்று மாசுபாடு அதிகமாக காணப்படுகிறது. இதனால் அங்குள்ள மக்களின் உ=இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது இதனால், அங்குள்ள மக்கள் தங்கள் தினசரி வேளைகளில் ஈடுபடும்போது கூட மாஸ்க் அணிந்துகொண்டுதான் இருக்கின்றனர்.
இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் கோவில் நகரமாக பார்க்கப்படும் வாரணாசியில் உள்ள தர்க்கேஸ்வர் மஹாதேவ் எனும் சிவன் கோவிலில் உள்ள சிவன் சிலைக்கும் அங்குள்ள கோவில் நிர்வாகிகள் மாஸ்க் அணிவித்துள்ளனர்.
இது குறித்து அங்குள்ள அர்ச்சகர்கள் கூறுகையில் ‘ வாரணாசி தெய்வ நம்பிக்கை உள்ள நகரம். இங்குள்ள சாமி சிலைகள் அனைத்தையும் உயிருள்ள தெய்வங்களாக கருதுகிறோம். ஆதலால் தான், இங்குள்ள சாமி சிலைகளுக்கும் கற்று மாசுபடுவதை தவிர்க்க முகமூடி அணிவித்துள்ளோம்.’ என தெரிவித்தனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.