வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் போட்டியிடுகிறார்.

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை  தேர்தல் நடைபெற உள்ளது. மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்நிலையில் பாஜக சார்பில் மக்களவை தேர்தலில் உத்திர பிரதேசத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடி போட்டியிடுகிறார்.ஆனால் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று தகவல் வெளியாகி வந்தது.

இந்நிலையில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் போட்டியிடுகிறார்.அதேபோல் கோரக்ப்பூர் தொகுதியில் மதுசுதன் திவாரி என்பவர் போட்டியிடுகிறார்.

அஜய் ராய் கடந்த மக்களவை  தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.