வன்னியர் உள் ஒதுக்கீடு – முதலமைச்சருக்கு ராமதாஸ் கடிதம்!

வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி முதலமைச்சருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம்.

வன்னியர் உள் ( 10.5%) ஒதுக்கீடு சட்டத்தை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியருக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது.

தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வு தேர்ச்சியில் கடைசி இடங்களை பிடித்த 15 மாவட்டங்களில் 12 வட தமிழ்நாட்டை சேர்ந்தவை. பள்ளி பொதுத்தேர்வுகளில் கடந்த 44 ஆண்டுகளாக வட மாவட்டங்கள் கடைசி இடங்களையே பிடிக்கின்றன என கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

வட மாவட்ட அரசு பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளும், போதிய ஆசிரியர்களும் இல்லை. வடமாவட்டங்களில் வறுமையில் வாடும் வன்னியர் சமுதாய மக்களால் தனியார் பள்ளிகளில் சேர முடியாது. எனவே, வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்