முற்றிலும் புதிய தோற்றத்தில் சரத்குமார் & ராதிகா! மணிரத்னத்தின் வானம் கொட்டட்டும் அப்டேட்!

தமிழ் சினிமாவின் திறமையான இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் இயக்குவதில் ஈடுபட்டு வருகிறார். மணிரத்னத்தின் தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் ஒரு புதிய படத்தை தயாரித்து வருகிறது.

இந்த படத்திற்கு வானம் கொட்டட்டும் என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், சரத்குமார், ராதிகா சரத்குமார் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் சரத்குமார் முற்றிலும் புதிய தோற்றத்தில் முறுக்கு மீசை வகிடெடுத்து சீவிய தலைமுடி என வித்தியாசமான தோற்றத்தில் சரத்குமார் காணப்படுகிறார். இப்படத்தின் ரிலீஸ் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.