வலிமையுடன் மோத காத்திருக்கும் வலிமையான ‘RRR’.?!

லிமை திரைப்படமும் ஆர்ஆர்ஆர் திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகுமா என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். 

இயக்குனர் எஸ்.எஸ் ராஜமௌலி  பாகுபலி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, அடுத்ததாக நடிகர் ராம் சரண், ஜூனியர் என் டி ஆரை வைத்து ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தை இயக்கி வருகிறார். பிரமாண்ட பொருட் செலவில் உருவாகும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர்  எம் எம் கீரவாணி இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்திலிருந்து வெளியான முதல் பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இந்த திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் கடந்த மாதம் வெளியானது.

இந்த நிலையில், நடிகர் அஜித் குமார் தற்போது இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திலிருந்து வெளியான “நாங்க வேற பாடல்” ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் அடுத்த அப்டேட்டாக வலிமை படத்தின் ரிலீஸ் தேதிகாக   காத்துள்ளனர். இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவலை என்னவென்றால் வலிமை திரைப்படமும் வரும் அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

இதனால் வலிமை திரைப்படமும் ஆர்ஆர்ஆர் திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகுமா என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.  வலிமை திரைப்படம் அக்டோபர்  13-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.