வலிமை திரைப்படத்தின் லேட்டஸ்ட் தகவல்.! உற்சாகத்தில் தல ரசிகர்கள்.!

வலிமை திரைப்பட குறித்த லேட்டஸ்ட் தகவல் சமூக வலைத்தளத்தில் கசிந்துள்ளது. 

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தற்போது நடித்து வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வருகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த ஜூலை 11-ஆம் தேதி வெளியானது . வெளியான நாளிலிருந்து தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில், யூடியூபில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

மேலும், வலிமை படத்தின் படப்பிடிப்பு 90% முடிந்துள்ள நிலையில், படத்திற்கான படப்பிடிப்பு 5 நாட்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில்,  படப்பிடிப்புக்காக படக்குழுவினர் வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த 5 நாட்கள் படப்பிடிப்பு முடிந்தவுடன் தயாரிப்பாளர் போனிகபூர் வலிமை திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு ரிலீஸ் தேதி அறிவிக்கப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளது.

 

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.