‘வலிமை’ பர்ஸ்ட் லுக், ரிலீஸ் குறித்து முடிவெடுத்த தல அஜித்.! அப்டேட் கூடிய விரைவில்.!

‘வலிமை’ பர்ஸ்ட் லுக், ரிலீஸ் குறித்து முடிவெடுத்த தல அஜித்.! அப்டேட் கூடிய விரைவில்.!

தல அஜித்தின் வலிமை படத்தினை ஆகஸ்ட் மாதத்தில் ரிலீஸ் செய்யவும், பர்ஸ்ட் லுக்கை தனது பிறந்தநாளுக்கு முன்பு வியாழக்கிழமை வெளியிடவும் தல அஜித் வலியுறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

டைட்டிலை தவிர இதுவரை வலிமை படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை என்பதால் ரசிகர்கள் பலரும் பல பிரபலங்களிடமும் அப்டேட் கேட்டு வந்தனர்.இதனை கண்டித்து தல அஜித் வெளியிட்ட அறிக்கையில் சரியான நேரத்தில் வலிமை அப்டேட் வெளிவரும் என்றும்,இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.இதனால் அஜித் ரசிகர்கள் அனைவரும் வலிமை அப்டேட் எப்போது வெளிவரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.

சமீபத்தில் வலிமை படத்தினை விஜய்யின் மாஸ்டர் படத்தினை போன்று திரையரங்குகளில் ரிலீஸ் செய்த இரண்டே வாரங்களில் ஓடிடியில் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது . இந்த நிலையில் தற்போது வலிமை படத்தின் ரிலீஸ் மற்றும் அப்டேட் குறித்து ஒரு சில முடிவுகளை தல அஜித் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது பிறந்தநாளிற்கு முன்பு வெளியிட வேண்டும் என்றும்,அதிலும் வியாழக்கிழமை வெளியிட வேண்டும் என்று படக்குழுவினரிடம் கேட்டு கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதன் பின் வரிசையாக ஆடியோ, டீசர், டிரெய்லர் ஆகியவற்றை வெளியிட வேண்டும் என்று கூறியதுடன் வலிமை படத்தினை ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்ய கூறியதாகவும், திரையரங்குகளில் வெளியாகி சில மாதங்களுக்கு பின்னரே ஓடிடியில் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களின் நலன் கருதி இந்த முடிவை தல அஜித் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த தகவல் எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

Join our channel google news Youtube