வைகை அணை : 5 மாவட்ட மக்களுக்கு 2ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை…!

71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 68.50 அடியை எட்டியுள்ளது. இதனால், 5 மாவட்ட மக்களுக்கு 2ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

தேனி : கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில், கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ள நிலையில், வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை பெருமளவில் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

இந்நிலையில், கனமழை எதிரொலியால், ஏரிகள், அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றது. இதனால் அணைகளில் உபரி நீர் திறந்து விடப்படுகிறது. அந்த வகையில், 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 68.50 அடியை எட்டியுள்ளது. இதனால், 5 மாவட்ட மக்களுக்கு 2ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.