சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக வைத்தியநாதன் நியமனம்!

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி எஸ்.வைத்தியநாதன் நியமனம்.

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதனை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டார். தற்போது சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா இன்றுடன் ஓய்வு பெறுவதால், புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதனை நியமித்துள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ராஜா பதவி வகித்து வந்தார். ஏற்கனவே, தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த முனீஷ்வர்நாத் பண்டாரி கடந்த 2022-ஆம் ஆண்டு செப்.12ம் தேதி பணி ஓய்வுபெற்றார். அவரை தொடர்ந்து செப்டம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார் டி ராஜா.  இவர் இன்றுடன் ஓய்வு பெற உள்ள நிலையில், புதிய பொறுப்பு தலைமை நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்