வெளிவந்தது வடசென்னையின் அடுத்த முக்கிய அறிவிப்பு

தனுஷ் – இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வடசென்னை. இப்படம் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் ஆடுகளம் படத்திற்கு 6 தேசிய விருதுகள் கிடைத்தது.

இவர்கள் கூட்டணியில் வெளியாகும் படங்களில் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் வடசென்னை பாடல்கள் எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். தற்போது வெளியான தகவலின்படி இம்மாதம் 23ஆம் தேதி வெளியாகும் என நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment