#BREAKING: கொரோனா தடுப்பூசியின் விலை ரூ.225 மட்டுமே – சீரம் இன்ஸ்டிடியூட் அறிவிப்பு

கொரோனா தடுப்பூசி  3 டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.225)கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரசால் இந்தியா உட்பட உலக நாடுகள் பெரும் பாதிப்பை கண்டுள்ளது.முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கொரோனா மருந்து ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி  வந்தது.  இதனிடையே தான் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. அவர்கள் கண்டுபிடித்த மருந்தை மனிதர்களிடம் சோதனை செய்தனர். மேலும் அதற்க்கு 1077 தன்னாலர்வர்கள் முன்வந்தனர். அவர்களின் உடம்பில் கொரோனா தொற்று செலுத்தப்பட்டது.அதன்பின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பு மருந்தை அவர்கள் மீது செலுத்தினார்கள்.  தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட 1077 பேருக்கு கொரோனா எதிர்ப்பு ஆற்றல் கிடைத்திருப்பதாக அவர்கள் நடத்திய சோதனை முடிவில் தெரியவந்துள்ளதாகவும், மருந்தின் சோதனை வெற்றி அடைந்துள்ளதாகவும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

எனவே இந்தியாவில்  புனேவை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் சீரம் இன்ஸ்டிடியூட் அனுமதி கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பித்தது. இந்தியாவுக்கு இந்த மருந்தினை தயாரிக்க ஒப்புதல் பெற்றது.  இதனிடையே அனுமதி கேட்ட நிலையில் மத்திய தர கட்டுப்பாட்டு அமைப்பின் சிறப்பு நிபுணர் குழு ஓன்று அமைக்கப்பட்டது.இந்த குழு மேற்கொண்ட ஆய்வில்,  ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை மனிதர்கள் மீது 2 மற்றும் 3-ஆம் கட்ட பரிசோதனை செய்ய அனுமதி வழங்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிற்கு  பரிந்துரை செய்தது.இதனை ஏற்றுக் கொண்ட அமைப்பு, இந்தியாவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை 2 மற்றும் 3ஆம் கட்ட பரிசோதனை செய்ய அனுமதி அளித்தது. இந்த சோதனை வெற்றிபெறும் பட்சத்தில் இந்த மருந்தை கோவிஷீல்டு என்ற பெயரில் இந்தியாவில் தயாரிக்க சீரம் நிறுவனம்  திட்டமிட்டது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி  3 டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.225)கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று சீரம் நிறுவனம்  தெரிவித்துள்ளது.மேலும் 2021 -ஆம் ஆண்டின் தொடக்கத்தில்  இந்தியாவில் வசிக்கும் பத்து கோடி பேருக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.