மதுரையில் தடுப்பூசி தட்டுப்பாடு – பொதுமக்கள் ஏமாற்றம்!!

கொரோனா தடுப்பூசி டோஸ்கள் தட்டுப்பாடு காரணமாக பெருபாலான மையங்களில் தடுப்பூசி முகாம்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் ஏமாற்றம்.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமடைந்து வருகிறது. அனைத்து பகுதிகளிலும் முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தமிழகத்துக்கு வரும் தடுப்பூசிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து வழங்கப்பட்டு வரும் நிலையில், மதுரையில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக முகாம்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

மதுரையில் இன்றைய நிலவரப்படி 1,020 டோஸ்கள் மட்டும் இருப்பு உள்ளதால் 5 இடங்களில் மட்டும் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது. வழக்கமாக மதுரையில் 80க்கும் மேற்பட்ட முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்படும். ஆனால், இன்று தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள காரணமாக வெறும் 5 முகாம்களில் மட்டும் தடுப்புசி செலுத்தப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி போட ஆர்வத்துடன் சென்ற பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். 85 மையங்களில் முகாம்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் ஏமாற்றத்துடன் மக்கள் திரும்பி செல்கின்றனர். மதுரை மாவட்டத்தில் இதுவரை 6,15,959 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். நேற்று மட்டும் 3,159 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்