பஞ்சாப் மாநிலத்திற்குள் நுழைய தடுப்பூசி அல்லது கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம்..!

பஞ்சாப் மாநிலத்திற்குள் நுழைய தடுப்பூசி அல்லது கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

பஞ்சாப் மாநிலத்தில் வருகின்ற திங்கள் கிழமை முதல் மாநிலத்திற்கு வருபவர்கள் கட்டாயம் முழுமையாக தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அண்டை மாநிலங்களான ஜம்மு, இமாச்சல பிரதேசம் ஆகியவற்றிலிருந்து வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கல்வி நிலையங்களில் முழுமையாக தடுப்பூசி செலுத்தி கொண்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அதேநிலையில், ஆன்லைன் வகுப்புகளும் நடைபெறும். மாணவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் வகுப்புகளில் கலந்து கொள்ளலாம் என்று பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது.