வீட்டில் இருந்தபடியே மாற்று திறனாளிகளுக்கு தடுப்பூசி – மத்திய அரசு!

மாற்று திறனாளிகளிகளின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் கொரோனாவின் தீவிரத்தை ஒழிக்கும் விதமாக மும்முரமாக தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாற்று திறனாளிகளுக்கும் நடக்க முடியாதவர்களுக்கும் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷண் அவர்கள் நேற்று டெல்லியில் நடந்த கூட்டத்தில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். அப்பொழுது மாற்றுத்திறனாளிகள் மற்றும் நடமாட முடியாதவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும் எனவும், 18 வயதுக்கு மேற்பட்டோரில் இதுவரை 66 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசியையாவது எடுத்துக் கொண்டு உள்ளதாகவும், 23 சதவீதம் பேர் இரண்டாவது டோஸும் எடுத்து கொண்டுள்ளதாகவும், இது இந்தியாவின் முக்கியமான மைல்கல் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இங்கிலாந்து செல்லும் இந்தியர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டாலும், அவர்கள் பத்து நாள் கட்டாய தனிமைப்படுத்தப்படுவார்கள் எனும் புதிய விதி மிகவும் பாரபட்சமானது எனவும், அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் இங்கிலாந்துக்கு அதே பாணியில் தக்க பதிலடி கொடுக்கும் உரிமை நமக்கு உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

author avatar
Rebekal