10 நாட்களுக்குள் தடுப்பூசி போட வேண்டும் – புதுச்சேரி தொழிலாளர் நலத்துறை

10 நாட்களுக்குள் தடுப்பூசி போட வேண்டும் – புதுச்சேரி தொழிலாளர் நலத்துறை

புதுச்சேரி தொழிலாளர் நலத்துறை, கடை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் 10 நாட்களுக்குள் தடுப்பூசி போட வேண்டும் என கெடு விதித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், தடுப்பூசி போடப்பட்டு வருகிற நிலையில், மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு ஒவ்வொரு மாநில அரசும் அறிவுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், புதுச்சேரி தொழிலாளர் நலத்துறை, கடை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் 10 நாட்களுக்குள் தடுப்பூசி போட வேண்டும் என கெடு விதித்துள்ளது. புதுச்சேரி அரசு, கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள பலகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வகையில் பல்வேறு சிறப்பு முகாம்களையும் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், தொழிலாளர் நலத்துறை ஆணையர் சுந்தரேசன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுச்சேரி மாநிலத்தில் தங்கும் விடுதிகள், கடைகள், உணவகங்கள், இதர வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் 10 நாட்களுக்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube